பழங்கள் சாப்பிடும் முறை;
------------------------------------------------
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை "எப்படி" அதுவும் "எப்போது" சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
---------------------------------------------------------------
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
"பிரட்" டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை "வெறும் வயிற்றில்" அல்லது #உணவுக்கு முன் #சாப்பிடங்கள்.
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!
No comments:
Post a Comment