Saturday 8 August 2020

லெபனானில் உயரும் பலி எண்ணிக்கை, குண்டுவெடிப்புக்கு என்ன காரணம்?

 

லெபனான் நாடு அண்மை காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மேற்காசிய நாடான லெபான் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. அதன் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து இரண்டாவதாக நடந்த பெரு வெடிப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டதுதுறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பின் விளைவாக, கிடங்கு அமைந்திருந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அருகிலிருந்த கட்டிடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. நகரின் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 78 பேர் உயிரிழந்ததாகவும், நான்காயிரத்துக்கும் அதிகமானோர் படு காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு... நூற்றுக்கணக்கானோர் பலி?

பாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் தூக்கிக்கொண்டு, ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து கொண்டிருக்கின்றன.தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்று கூறப்பட்டுவந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைத்திருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணமாக லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியுள்ளார்.

உள் நாட்டு போர், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் லெபனானில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது

No comments:

Post a Comment