Wednesday 26 August 2020

வெங்காயத்தின் நன்மைகள்

வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
1. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
2. காய்ச்சல் மற்றும் ஒவ்வாமையை குணப்படுத்துகிறது
3. இரத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது
4. வீக்கத்தைக் குறைக்கிறது.
5. புற்றுநோயைத் தடுக்கிறது
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7. ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது
 8.கொழுப்பு மற்றும் கலோரிகளில்  குறைவு

Thursday 20 August 2020

vaa tamizha - online fm

www.vaatamizha.com

நிலம் அளவுகள் பற்றி - about land and measurements

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி
எனக்கு பகிர்ந்தவர்க்கு நன்றி

Wednesday 19 August 2020

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

🩸  *மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்* 🩸

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.*

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

#பகிர்வு#

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday 18 August 2020

How to Eat Fruits - பழங்கள் சாப்பிடும் முறை

பழங்கள் சாப்பிடும் முறை;
------------------------------------------------
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை "எப்படி" அதுவும் "எப்போது" சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
---------------------------------------------------------------
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
"பிரட்" டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை "வெறும் வயிற்றில்" அல்லது #உணவுக்கு முன் #சாப்பிடங்கள்.
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!

Saturday 8 August 2020

லெபனானில் உயரும் பலி எண்ணிக்கை, குண்டுவெடிப்புக்கு என்ன காரணம்?

 

லெபனான் நாடு அண்மை காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மேற்காசிய நாடான லெபான் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. அதன் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து இரண்டாவதாக நடந்த பெரு வெடிப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டதுதுறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பின் விளைவாக, கிடங்கு அமைந்திருந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அருகிலிருந்த கட்டிடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. நகரின் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 78 பேர் உயிரிழந்ததாகவும், நான்காயிரத்துக்கும் அதிகமானோர் படு காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு... நூற்றுக்கணக்கானோர் பலி?

பாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் தூக்கிக்கொண்டு, ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து கொண்டிருக்கின்றன.தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்று கூறப்பட்டுவந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைத்திருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணமாக லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியுள்ளார்.

உள் நாட்டு போர், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் லெபனானில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது

Monday 3 August 2020

கருந்துளசி பயன்கள் - Thulasi Uses - துளசி

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.

கருந்துளசி தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்த்தனர்.சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் உண்டாக்கப்பட்ட மூலிகை.

இது பெண்களுக்கு வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை சாறுடன் நான்கு தேக்கரண்டி அளவு எள் எண்ணெய் விட்டு கலக்கி உள்ளே கொடுத்துவிட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.

இந்தக் கருந்துளசியினால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

*மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.
*காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.

*வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.

*ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும். வறட்சியைத் தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.

*இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். புற்றுநோய்கூட உடனே கரைந்துபோய்விடும்.கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்.

* கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.

*தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.

*கருந்துளசியை சளித்தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

*சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.

*அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

*தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

* துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

* ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.

மேலும் இதன் மருத்துவ தன்மைகள்:-

* ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

* ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை

* வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை

* காய்ச்சலை போக்கும் தன்மை

* கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

* மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

* நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

* கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை.

நன்றி ... வாழ்க வளமுடன் .... 

Saturday 1 August 2020

மரசெக்கு எண்ணெய் - chekku oil - pure oil

செக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே!

`வை த்தியருக்குக் கொடுப்பதை வணிகருக்குக் கொடு' என்பது பழமொழி. அந்நாள்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்ததற்காகச் சொல்லப்பட்ட பழமொழிதான் இது. கண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி, நோய்வாய்ப்பட்டு மருத்துவருக்குக் காசு செலவழிப்பதைவிட, வணிகருக்குக் கொடுத்துவிடலாம் என்பது இதன் அர்த்தம். முன்னர், கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிட்டு வீட்டு உபயோகத்திற்குப் போக மீதமிருப்பதை மரச்செக்குகளில் ஆட்டி செக்கு எண்ணெய்யாக விற்பனை செய்வார்கள் அல்லது வீட்டு உபயோகங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரச்செக்கு வழக்கில் இருந்தது. அப்போது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி செக்கில் அரைத்து எண்ணெய்யாக நேரடியாக மாற்றிக் கொள்வர். நவீன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வந்த பின்னர், செக்குகள் பக்கம் மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர். அதன் விளைவு, மரச்செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வு காரணமாக மீண்டும் மரச்செக்கை நாட ஆரம்பித்திருக்கிறோம்.

மரச்செக்கு ‘செக்கு' எண்ணெய் வேண்டும் என்று பலரும் வாங்கி உபயோகித்து வருகிறார்கள். அவை அனைத்தும் உண்மையான செக்கு எண்ணெய்யா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். செக்கு எண்ணெய் என்பதற்கும் மரச்செக்கு எண்ணெய்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.
செக்கில் இரும்புச் செக்கு, மரச்செக்கு என இரு வகைகள் உண்டு. இரும்புச் செக்கை ரோட்டரி என்றும் சொல்வர். இரும்புச் செக்கு முழுமையாக இரும்பில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் திறன் 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும். அதனால் சுமார் 300 டிகிரி வெப்பத்தில் அரைக்கும். 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும் மோட்டார் மூலம், செக்கின் உலக்கைப் பகுதி ஒரு நிமிடத்திற்கு 34 முதல் 36 சுற்றுகள் சுற்றும். இந்த வேகமும், அதிகமான வெப்பநிலையும் அரைக்கும் தானியத்தின் உயிர்த் தன்மையை நிச்சயமாகப் பாதிக்கும். இதையும் பலர் செக்கு எண்ணெய் என்று வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு முழுச் சத்துகளையும் கொடுக்க முடியாது. ஆனால் கலப்பட எண்ணெய்களிலிருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழிதான். பலர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரச்செக்கின் கீழ்ப்பகுதியும், உலக்கையும் நிச்சயமாக மரங்களில் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 3 எச்.பி திறன் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இச்செக்கின் உலக்கை ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள் வரை சுற்றும். இதனால் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் உருவாகும். அதனால், இந்த எண்ணெய்யில் உயிர்ச் சத்துகள் ஒருபோதும் அதன் தன்மையை இழக்காது. இது முழுமையாக நமது உடலுக்கும், உயிருக்கும் முழுயான நன்மை கிடைக்கும்.

ரோட்டரி செக்கு எண்ணெய்களோடு ஒப்பிடும்போது மரச்செக்கு எண்ணெய் விலை கொஞ்சம் அதிகம்தான். உடலுக்குத் தகுந்த எண்ணெய் உருவாக்க, பக்குவம், நேரம், செலவு சற்றுக் கூடுதலாகத்தான் ஆகும். எண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளை உருவாக்க முன்னர் சொன்ன மூன்றுமே தேவையில்லை. சரியில்லாத உணவை எடுத்துக்கொண்டு கொழுப்பு ஏறி, மருத்துவரிடம் சென்று மாத்திரை, மருந்து இவற்றிற்குச் செலவு செய்வதை விட, மரச்செக்கு எண்ணெய்க்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்கினால் தவறில்லை என்பதை உணர மறுக்கிறோம். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பயிர்களைக் காய வைத்து, கல், தூசு நீக்கியே மரச் செக்கில் ஆட்டப்படுகிறது. கற்களை நீக்காமல் ஆட்டினால் மரத்தால் ஆன உலக்கையும், அடிப்பாகமும் சேதமாகும். ஆனால் ரோட்டரி செக்குகள் முழுவதும் இரும்பால் ஆனதால் கல் இருந்தாலும் கவலையில்லை. சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யா என உறுதி செய்து கொள்ள, எண்ணெய் பாட்டில் வாங்கும்போது அதைத் தலைகீழாக ஒரு முறை திருப்பிப் பார்க்கலாம். கறுப்பாக கசடுத் துகள்கள் தென்படும். அப்போது அதை உண்மையான செக்கு என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய்யைக் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். அப்போது ஏற்படாத கொழுப்புச் சத்து ஏன் இப்போது ஏற்படுகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. காரணம், அவர்கள் பயன்படுத்தியது மரச்செக்கு எண்ணெய். உடலுக்கு நன்மை தரும் பல பாரம்பர்ய முறைகளைக் கைவிட்டு இருக்கும் தற்போதைய சூழலில், மரச்செக்கு எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டால், இப்போது இருக்கும் மரச்செக்குகளாவது அழியாமல் பாதுகாக்கப்படும்.

Thanks to: https://www.vikatan.com/literature/environment/144597-there-is-a-difference-between-normal-oil-press-oil-and-wooden-oil-press-oil

#Groundnutoil #Coconutoil #Sesameoil #Marachekkuoil #coldpressed #

fact about - ground nut

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

நன்றி ....வாழ்க வளமுடன் .... %

தர்மபுரி மாவட்டம் கொரானா ஆகஸ்ட் 2020 , சட்டம் மற்றும் ஒழுங்கு முறை , விதிகள்

காய்கறி - பெண்களுக்கு தேவையானவை