Friday, 31 July 2020

வரலட்சுமி விரதம் என்றால் என்ன?

ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த விரதத்தின் நோக்கம்.[மை தருமபுரி]
இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்.
தொழில் சிறக்க வேண்டும். அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைப்பிடிக்கக்கூடிய விரதமாகும்.
சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன். அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.
இந்த நாளில் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் ஆன்மீக மற்றும் பொருள் செழிப்புக்காக அஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும்.

No comments:

Post a Comment