Friday 31 July 2020

வரலட்சுமி விரதம் என்றால் என்ன?

ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த விரதத்தின் நோக்கம்.[மை தருமபுரி]
இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்.
தொழில் சிறக்க வேண்டும். அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைப்பிடிக்கக்கூடிய விரதமாகும்.
சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன். அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.
இந்த நாளில் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் ஆன்மீக மற்றும் பொருள் செழிப்புக்காக அஷ்ட லட்சுமியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும்.

Tuesday 28 July 2020

Team Viewer என்றால் என்ன?


TeamViewer: The Remote Desktop Software
உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த link-ல் செல்லவும். https://www.teamviewer.com/en/download/windows/  இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் மேலும் ஒரு வசதி உள்ளது. File Transfer என்பது. இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும் உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password-ஐ மாற்ற Teamviewer open செய்து Refresh போன்ற button (Password க்கு அடுத்து) click செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே button-ல் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் open செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer-க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Helpful Information - facebook group

https://www.facebook.com/groups/1435217326727621/ Join us

how to get epass in tamilnadu - TN ePass Application

குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
Selected set of Industries can apply.
See list
திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், அரசு ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்தம் விண்ணப்பித்தல், வேறு இடத்தில் சிக்கி தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Individuals can apply for marriage, medical emergency, close relative's death, Govt. Tender bidding, Ongoing Govt. work or if stranded only.


அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்க விலக்கு அளிக்கப்பட்ட துறைகள்.
Exempted activities for which pass need not be applied.
tn e pass apply - click here