உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..! ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது…
முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்…
ஹீமோகுளோபின் அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன…
இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம். இந்த பகுதியில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை பற்றி காணலாம்.
அறிகுறிகள்
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
உடலின் செயல்பாடு
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ஹீமோகுளோபின் அளவு
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
1. கருப்பு உலர் திராட்சை
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அதனை வாங்கி, ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இது போன்று செய்து வந்தால் இரத்தம் அதிகரிக்கும்.
2. போலிக் அமிலம்
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.
3. பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
4. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.
5. இரும்புச்சத்து
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.
6. மாதுளை
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
7. உடற்பயிற்சி
தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
8. வைட்டமின் சி
வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.
9. கருப்பு சர்க்கரைப்பாகு
இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 டீஸ்பூன் சர்க்கரைப்பாகுவை 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் நாற்றும் 1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள். இதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.
10. பேரீச்சை
100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். கால்சியம் சிறிதளவு இருப்பதால் எலும்பு, பற்களுக்கு நல்லது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ள இந்தப் பழம் ஒரு வரம்.
11. தர்பூசணி
தர்பூசணி புத்துணர்ச்சி, தரும் பழம் மட்டுமல்ல… வெயில் காலத்துக்கு ஏற்றதும்; உடல்நலத்துக்குச் சிறந்ததும் கூட. இது, உடலில் உள்ள வெப்பத்தையும் ரத்தஅழுத்தத்தையும் சரிசெய்யும். வைட்டமின் ஏ, தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளன. இதில் உள்ள லைகோபீன் என்ற சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
12. அத்திப்பழம்
ஜீரண சக்திக்கு உதவுவது அத்திப்பழம். நமக்குப் புத்துணர்ச்சியை தந்து நுரையீரலிலுள்ள அடைப்புகளை நீக்கும். தோல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதில் உள்ள க்ளோரோஜெனிக் (chlorogenic) அமிலம் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கச் செய்து, சர்க்கரையைக் குறைக்கும். நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ரத்தப்போக்கைக் கட்டுபடுத்தும் வல்லமைகொண்டது.
13. கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் சிறிதளவே இருந்தாலும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். இதன் கலோரி அளவு 51. நார்ச்சத்து 5.2% இருக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சிறிதளவு இருக்கிறது. 100 கிராம் கொய்யாவில் 0.27 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலிமை பெறும். இதுவும் ஒரு வகையில் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. எனவே, குடல் சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
14. கடலை மிட்டாய்
நிலக்கடலையானது ஏழைகளின் முந்திரி என்றழைக்கப்படுகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடலை பலமாக்கும். பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது.
15. சத்துக்கள்
நிலக்கடலையில், போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது.
16. பித்தப்பை கற்கள் வராமல் தடுக்க..
குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
17. சாப்பிடாமல் இருக்க கூடாது
நீங்கள் வேலை அவசரத்தில் சாப்பிடாமலேயே சென்று விடும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். உணவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்க வேண்டாம். முக்கியமாக காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
Source: tamilpalsuvai
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!