Thursday 24 October 2013

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய..இயற்கை மருத்துவம்...

மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள்.

15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.

வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள்.
நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.

Tuesday 22 October 2013

தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

 நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா? இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது. இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக்காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று நாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு உலகை சுற்றி வருகிறோம். அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டுதான் இருந்திருப்போம்.



Monday 21 October 2013

இயற்கை முறையில் வெண்மையான பற்களைப் பெற :-

வேப்பங்குச்சி- 

இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

உப்பு-

உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்-

கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை-

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கிராம்பு-

கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.

பயனுள்ள இயற்கை வைத்திய குறிப்புகள் :-

உங்கள் அனைவருக்கும் வீடுகளில் இருக்கும் போது உங்களுக்கு சிறிய நோய்கள் வரலாம் அப்படி வீடுகளில் இருக்கும் போது உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக வீட்டில் இருந்தபடி என்ன இயற்கை வைத்தியம் செய்யலாம்.

* துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

* காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

* அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

* கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

* காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் :-

கிரீன் டீயின் நன்மைகள் 

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாகஎரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராகவைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலைபோக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்துஎலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாகஉதவுகிறது.


Thursday 17 October 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?!


தினமும் ஒரு பாக்கெட் சிகரட்வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் . மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகைப் பிடிப்பவர்களைத் தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துக ிறது, இது சைனாவில் பிரபலம்நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லிப் புகைப்பழக்கத்தை ஒழிக்கச் சிறந்த வழி.

Wednesday 16 October 2013

கொய்யா இலையின் மருத்துவ குணங்கள்:-



கொய்யா இலையின் மருத்துவ குணங்கள்:-

கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

வயிற்றுப்போக்கு

பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர் அதில் கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

அதிக கொழுப்பு

இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய்

கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம். வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

பாட்டி வைத்தியம்:-



* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

*பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

*வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.

*வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.

*வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.

*வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

*வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

*லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

*ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

*உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.

சுனாமி பற்றிய தகவல்கள்:-

சுனாமி (Tsunami) என்பது ஜப்பானிய மொழிச்சொல் சு என்றால்துறைமுகம் னாமி என்றால் பேரலை அதாவது துறைமுகப் பேரலைஎனப்படுகிறது. தமிழில் இதை ஆழிப்பேரலை என்கிறோம்.


ஆழிப்பேரலை முக்கியமாக மூன்று காரணங்களால் ஏற்படுகிறது.முதலாவது, கடலுக்கடியில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதன் மூலம்ஏற்படுகிறது. இரண்டாவது, கடலடியில் உள்ள எரிமலைகளில் பெரும்வெடிப்புகள் ஏற்படும்போது வருகிறது. மூன்றாவது, கடலடியில் பெரும்நிலச்சரிவு ஏற்படும்போது நிகழ்கிறது.


கி.பி. 1964 - ஆம் ஆண்டு அலாஸ்காவில் இந்த மூன்றும் அடுத்தடுத்துஒரே இடத்தில் நிகழ்ந்ததால் பெரும் சுனாமி ஏற்பட்டது. அதுவே இதுவரைவரலாற்றில் பதிவாகியுள்ள சுனாமிகளில் மிகப் பெரியது.


மேற்கூறியக் காரணங்களால் உந்தப்படும் கடல் நீரானது கடல்மட்டத்திற்கு கீழ் அதிவேகமாக பயணிக்கும் அலையாக உருவெடுக்கிறது. பலஆயிரம் கிலோமீட்டர்கள் அதே வேகத்தில் பயணித்து எதிர்ப்படும்நிலப்பரப்புகளில் மோதி மேலெழுந்து நிலபரப்பைப் தாக்குகிறது. இந்த அலைதன்னுடன் பெரும் பாறைகளையும், பெருமளவில் மணலையும், கடலடியில்படிந்திருக்கும் கழிவுகளையும் கொண்டுவந்து வெளியே தள்ளுகிறது.


information